2 Jul 2017

கறுப்பும் வெள்ளையும்


கறுப்பும் வெள்ளையும்
தன்னிடம் இருந்த வண்ணக் கலவைகளால்
விதவிதமான ஓவியங்களை
உருவாக்கிக் கொண்டிருந்தான் ஓவியன்
கடவுளின் படைப்பைப் போல
அவன் கைகளிலிருந்து
வழிந்து கொண்டிருந்தன ஓவியங்கள்
ஒரு நடன மாதுவின் உடலைப் போல
சுழன்று கொண்டிருந்தன அவனின் தூரிகைகள்
வண்ண வண்ண ஓவியங்களுக்கு இடையே
ஒரு கறுப்பு வெள்ளை ஓவியத்தையும்
மனதுக்குள் அவ்வபோது தீட்டிக் கொள்கிறான்
தன்னை நேசித்தவளின் நினைவாக!
*****

No comments:

Post a Comment