3 சி.எப்.எல். பல்புகள்
முறுக்குப்
போல் சுற்றிக் கொண்டிருக்கும்
பிரமாண்ட
சி.எப்.எல்.
பல்பை
முதலில்
காய்கறிக் கடையில் பார்த்தேன்
அவர் சொன்ன
அதிக விலை
பல்பு கக்கிய
வெளிச்சத்திற்கும் சேர்த்துதான்
இருக்க வேண்டும்
என நினைத்துக் கொண்டேன்
சிறிய முறுக்குகளுடன்
கூடிய
ஒரு பல்பை
டாய்லெட்டின்
மேற்கூரையில் பார்த்தேன்
அத்தனை பிரமாண்டம்
இல்லை அது
இறுதியல்
சொட்டுச் சொட்டாக
சொட்டும்
சிறுநீரைப் போல்
வெளிச்சத்தைக்
கக்கிக் கொண்டிருந்தது
மின்சாரத்தைச்
சேமிப்பதாக
சொல்லப்படும்
அந்த பல்பைத்
தன்னை விற்றுச்
சம்பாதிக்கும்
நடுத்தெரு
சாவித்திரியின் வீட்டில்
ஒரு நாள்
பார்த்த போது சந்தோசம்தான்
குண்டு பல்பு
சீக்கிரம் சூடாவதன் குறியீடு
என்று அவளும்
அழுத்திச் சொன்னாள்
*****
No comments:
Post a Comment