5 Jul 2017

ஆதிக்க வெறி குறித்து எஸ்.கே.(தமிழ் எழுத்தாளன்)


ஆதிக்க வெறி குறித்து எஸ்.கே.(தமிழ் எழுத்தாளன்)
            ஆதிக்க வெறி பிடித்தது போல ஒருவர் நடந்து கொள்ளும் போது, அவர் தனக்கான கண்ணியத்தை இழந்து விடுகிறார். கலந்து ஆலோசிக்கும் நற்பண்பு அவருக்கு அவசியம்.
            ஒருவரின் அறியாமையைப் பயன்படுத்தி மிரட்டுவது கீழ்த்தரமான செயல். ஆதிக்க வெறி பிடித்தவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். ஆதார் எண் கிடைக்க விடாமல் செய்து விடுவேன், ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்காமல் செய்து விடுவேன் என்று அவர்கள் மிரட்டுவது மிரட்டலின் உச்சம்.
            ஆதிக்க வெறி பிடித்த அவர்கள் பொதுக் காசை எடுத்து சுரண்டிச் சாப்பிட வேண்டும் என்று ஆசைபட்டு விட்டால், அவரைப் போல உலகில் ஓர் அயோக்கியன் கிடையாது. அப்படிப்பட்ட ஓர் ஆதிக்கவெறி பிடித்தவரை எப்படித் திருத்துவது? அப்படி ஒருவர் ஆதிக்கம் செலுத்தும் பதவிக்கோ அது போன்ற நிலைக்கோ தேர்ந்தெடுக்கபட்டிருக்கவே கூடாது. ஆனால், அப்படிப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும், நம் சமுதாயத்தின் துரதிர்ஷ்டத்தை.
            எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனாகிய நான் ஆதிக்கவெறியர்களால் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கிறேன். சொன்னால், தமிழ்நாடே கொதித்து எழும் என்பதால் வெளியே சொல்லாமல் அமைதி காக்கிறேன். நம்மால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது பாருங்கள், அது ஆதிக்க வெறியர்களாக இருந்தாலும். (இதுதான் உலக பொது நேச நோக்கு என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.)
*****

No comments:

Post a Comment

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே! இருக்கின்ற வேலைகளை தனியார் ஒப்பந்த வேலைகளை விடுவதற்கு நிரந்தரப் பணிகளைத் தற்காலிகப் பணிகளாக ...