6 Jul 2017

விரைவு அவசரம்


காலவேகம்
            அதிவேகமாகச் சென்று இறந்தவனின் ஈமச் சடங்கு காரியங்கள் மசமசவென மெதுவாக நடந்து கொண்டிருந்தது.
*****
நடைப்பழக்கம்
            காரில் தினந்தோறும் நான்கு கிலோ மீட்டர் பயணித்து, அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாக்கிங் சென்று மீண்டும் காரில் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார் கார்மேகம்.
*****
விரைவு அவசரம்
            ‍லேட்டாக வந்த கேஷியர் சீக்கிரம் சீக்கிரம் என்று நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்தவர்களை அவசரப்படுத்தினார்.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...