18 Jun 2017

மைதானம்


மைதானம்
ஒரு சென்ட் பத்து லட்சத்திற்கு விற்கும்
இந்தப் பகுதியில்
விளையாடப் பூங்காக்கள்
இருக்குமோ என்னவோ?!
அங்கு ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கலாம்!
அதற்குள் காசு கொடுத்து
விளையாடிக் கொள்ளலாம் குழந்தைகள்!
காசு கொடுக்க வாய்ப்பில்லாதக் குழந்தைகள்
அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொள்ளலாம்!
உள்ளே செல்ல
வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகள்
அதன் மீது கல்லெறிந்து
விளையாடிக் கொள்ளலாம்!

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...