18 Jun 2017

ஞானியர்கள், யோகியர்கள் பெருகக் காரணம்!


ஞானியர்கள், யோகியர்கள் பெருகக் காரணம்!
            "உலகில் வேறெந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் ஞானிகளும், யோகிகளும் அதிகம் உள்ளதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் என்ன என்றால்..."
            சற்று இடைவெளி விட்ட சமத்து சம்புலிங்கம்,
            தொண்டையைச் செருமிக் கொண்டு, மண்டையை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு,
            "ஆதார் எண் கட்டாயமில்லை என்று சொல்லும் நீதிமன்றத்தை நம்பி வாழ்வதா? ஆதார் எண் கட்டாயம் என்று சொல்லும் அரசாங்கத்தை நம்பி வாழ்வதா? இப்படித்தான் இந்தியாவில் எதை நம்பி வாழ்வது என்ற குழப்பம் அடிக்கடி ஏற்படும்! இந்தக் குழப்பத்தில் மண்டையைப் பிய்த்துக் கொண்டு, வழுக்கையும் சொட்டையும் ஆக விரும்பாமல், எதையும் நம்பாமல் வாழும் ஞானியர்கள், யோகியர்கள் கூட்டம் இப்படித்தான் இந்தியாவில் அதிகரித்தது." என்று முடித்தார்.
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...