11 Jun 2017

நினைவோ ஒரு மறதி


நினைவோ ஒரு மறதி
பிள்ளைகள் விளையாட
எடுத்துச் சென்ற பிறகுதான்
நினைவுக்கு வந்தது
செல்போனில் சேமித்திருந்த
ஆபாச பட நினைவு.
*****

அலறும் ஆவி
இன்னும் ஒரு வருசம் இருந்திருந்தா
இன்னொரு கல்யாணத்தை முடிச்சிருப்பார்.
ஒரு ஆறு மாசம் இருந்திருந்தா
பேரப்பிள்ளையைப் பார்த்திருப்பார்.
இன்னும் ஒரு மாசம் இருந்திருந்தா கூட
கிரகப்பிரவேசும் முடிஞ்சிருக்கும்.
சாவுக்கு வந்தவர்கள்
ஆளாளுக்கு ஒன்று சொல்ல,
இதற்கு மேல் செலவு பண்ணிச் சாக
உடம்பில் தெம்பு இல்லை
என்று
உரக்கக் கத்திக் கொண்டிருந்தது
உயிர் பிரிந்துச் சென்ற அவரது ஆவி.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...