11 Jun 2017

ஐந்து லட்சம் பெறுமானம் உள்ள உயிர்


ஐந்து லட்சம் பெறுமானம் உள்ள உயிர்
            கட்டிடம் இடிந்து விழுந்து பலி என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். கட்டிடத்தை இடிக்கும் போது பலி என்பதை சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணியில்தான் கேள்விப்பட வேண்டியதாக இருக்கிறது.
            நம் நாட்டின் சட்டங்களில் மட்டும் ஓட்டைகளில்லை, பாதுகாப்பு முறைகளிலும் ஓட்டைகள் நிறைய இருக்கின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.
            கடலில் கசிந்த கச்சா எண்ணெயை வாளியில் மொண்டு அள்ளியது, கையில் உறைகள் கூட இல்லாமல் சென்னை பெருவெள்ளக் கசடுகளை அள்ள துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்தியது என்று இதற்கு முன் பல நிகழ்வுகள் நிறையவே நம்மிடம் உண்டு.
            காசை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் மனித உயிர்களை மலினப்படுத்தும் போக்கு நம் நாட்டில் மட்டுமே காணப்படும் குரூரம். ஒரு தனிமனிதன் அல்லது ஒரு கம்பெனி லாபம் பார்க்க நாலு பேரைக் கொல்லலாம் என்ற வக்கிரமும் நம் நாட்டில் மட்டுமே காணப்படும் கேவலம்.
            பலியானவர்க்கு சென்னை சில்க்ஸ் உடனடியாக ஐந்து லட்சம் நிவாரணத்தை அறிவித்திருக்கிறது. பெருநிறுவனங்களுக்கு ஐந்து லட்சங்களும், ஐந்து கோடிகளும் அத்தோடு மனித உயிரும் சாதாரண ஒன்றுதான்.
*****

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...