பெருந்தலைவர்களுக்கானப் பாடம்
நாமொன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்
என்பார்களே, அது இங்கிலாந்தின் பிரதமர் தெரசா மேவுக்கு நடந்திருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையோடு
ஆட்சி அமைக்கலாம் என்ற ஆசையோடு ஆட்சியைக் கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த முயன்றவர்க்கு
கூட்டணி ஆட்சி அமைக்கும் பாக்கியம்தான் கிடைக்கிறது. சில நேரங்களில் இப்படித்தான் பிள்ளையார்
பிடிக்கப் போய் குரங்காகி விடுவதுண்டு.
பேராசை பெருநஷ்டம் என்பார்கள். இதில் தெரசா
மேவுக்கு சிறுநஷ்டம். எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடுவார் என்பது வேறு விஷயம்.
தலைவர்கள் நினைப்பதற்கு ஏற்றாற் போல் எல்லாம் மக்கள் ஆட மாட்டார்கள் என்பதற்கு இந்நிகழ்வு
ஒரு சான்று.
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம்
அனைத்திற்கும் ஒரே தேர்தல் நடத்தி எல்லாவற்றிலும் ஒருங்கே ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம்
பா.ஜ.க. விற்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி ஒரு தேர்தல்
நடந்தால், அதன் முடிவு எப்படி இருக்கும்? முடிவு எப்படியும் இருக்கும் என்பதற்கு கட்டியம்
கூறுவதான் நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து தேர்தல் முடிவுகள் என்பதை மறுக்க முடியாது.
*****
No comments:
Post a Comment