22 Jun 2017

பதிலில் இருக்கு ஆன்ஸர்!


பதிலில் இருக்கு ஆன்ஸர்!
            இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழர்களை ஒன்றுபடுத்தி விடலாம். ஆனால், தமிழ் ஆதரவு என்ற பெயரில் தமிழர்களை ஒன்றுபடுத்தி விட முடியுமா? என்பது ஒரு கேள்விக்குறி.
            பாரதிதாசன், பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் முயன்று பார்த்தார்கள். அதற்குப் பின் அவரின் வழி வந்தவர்களும் முயன்று பார்த்தார்கள், முயன்று பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
            முயற்சி வெற்றியா? தோல்வியா? என்பது எந்தப் பக்கம் பதில் சொன்னாலும் முதுகைக் குத்தும் ரகம்.
            டீக்கடையில் டீ குடித்து, பஸ்ஸில் ஏறி, டிக்கெட் எடுத்து, மெயின் ரோட்டில் இறங்கி, லெப்டில் கட் பண்ணி, ரைட் எடுத்து, நாலாவது அவென்யூவில் இருக்கும், மாடர்ன் அபார்ட்மென்டில் போய் பேனைப் போட்டு விட்டு, டயர்டைப் போக்கிக் கொண்டால் ஒரு ஆன்ஸர் கிடைக்கலாம்.
            மேற்கண்ட பதிலைக் கொண்டு ஒரு வாறாக நிலைமையை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
*****

No comments:

Post a Comment

மட்டையான மட்டைப் பந்து!

மட்டையான மட்டைப் பந்து! நூற்று இருபது பந்துகள் விளையாடத் தெரிந்த அளவுக்கு ஐந்து நாள் போட்டி விளையாடத் தெரியாது அல்லது ஐந்து நாள் போட...