22 Jun 2017

பருவநிலை


அதிர்ச்சி
            பணிக்காலம் முழுதும் மாமூல் வாங்கிய வரதராசனுக்கு பென்ஷன் கோப்புகள் நகர ஐயாயிரம் கொடுக்க வேண்டும் என்ற போது அதிர்ச்சியாக இருந்தது.
*****
வாடிக்கை
            கூலிங் போதவில்லை என்று கடைக்காரனைத் திட்டினான் வாடிக்கையாளன். "அடிக்கடி கரண்ட் கட் ஆனா நான் என்ன பண்ணுறது?" இ.பி.யைத் திட்டினான் கடைக்காரன். எல்லாவற்றையும் சிரித்தபடியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் நடுவானத்துச் சூரியன்.
*****
பருவநிலை
            "அடிக்கடி கரண்ட் கட் ஆகும்" கோடைக்கால பருவநிலை குறித்து ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னான் மாணவன்.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...