23 Jun 2017

எந்தக் காக்கை இந்தக் காக்கை?


எந்தக் காக்கை இந்தக் காக்கை?
காக்கைகள் அழகாகக் கரைகின்றன
இழவு வீட்டின் வீசி எறிந்த
எச்சில் இலைகளை மொய்த்தபடி!
அதன் கரிய நிறத்தின் பளபளப்பில்
அது தின்ற நாறிய எலியின் துர்நாற்றம்
மறைந்து போகிறது.
நமக்குப் பிடிக்காத பக்கத்து வீட்டின்
சோற்றுருண்டைகளைத் தின்று விட்டு
நமது அழைப்பையும் ஏற்று வரும்
காகத்திற்கு யாவரும் கேளிர்.
இன்று அமாவாசைச் சோறு தின்னும் காக்கை
போன அமாவாசையின் போது தின்ற
அதே காக்கையா
வேறு காக்கையா என்று
தொக்கி நிற்கும் கேள்வி
கல்லடி படும் அளவிற்கு
அதற்குள் நான்கைந்து காகங்களைக்
கூவி அழைத்து விடுகிறது
விருந்துண்ண வந்த காக்கை!
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...