அடையாளம்
"ஹீரோ அடிக்கிறப்பல்லாம் அடியை வாங்கிட்டு
கீழே விழுறார்ல்ல அவர்தான் இந்தப் படத்தோட ஸ்டன்ட் மாஸ்டர்!" என்று அடையாளம்
காட்டினான் பைரவன்.
*****
மாடர்ன் டுக்கா
"சுரேஷைப் பிடிக்கலைன்னு சொன்னீயே!
அவனோட டுக்கா விட்டுட்டியா?" என்று அம்மா கேட்டதற்கு நரேஷ் சொன்னேன்,
"ம்ஹூம்! அவனை பேஸ்புக்கிலேர்ந்து அன்பிரன்ட் பண்ணிட்டேன்!"
*****
நாய் போல
"சுகர் வந்தா நாயா நடக்கணும்!"
என்றார் நாயோடு நடந்து கொண்டிருந்த நாகராஜ்.
*****
No comments:
Post a Comment