இட்டிலிக் கணக்கு
டயட்டில் இருப்பதாக கூறிக் கொள்ளும் அக்கா காலையில்
இரண்டு இட்டிலிகள் சாப்பிடுவாள்
சுகருக்காக வில்லைகள் விழுங்கும் அப்பா
இட்டிலிகளுக்குப் பதிலாக
சரியாக இரண்டு சப்பாத்திகள் சாப்பிடுவார்
எடை குறைப்பில் இருப்பதாக சொல்லும் அண்ணன்
நான்கு இட்டிலிகளோடு நிறுத்திக் கொள்வான்
எப்போதும் வழக்கம் போல்
மூன்று இட்டிலிகளோடு நிறுத்திக் கொள்வான் தம்பி
மீந்து போவதை விரும்பாத அம்மா
மிஞ்சியதை வேலைக்காரிக்குப் போட்டு விட்டு
விரதம் இருந்து கொள்வாள்!
******
No comments:
Post a Comment