15 Jun 2017

விவசாயிகளை விஜய்யாவது காக்கட்டும்!


விவசாயிகளை விஜய்யாவது காக்கட்டும்!
            அய்யாக்கண்ணு போன்ற விவசாயிகள் பல நாட்கள் டெல்லியிலும், சில நாட்கள் சென்னையிலும் போராடிப் பெற்ற கவன ஈர்ப்பை நடிகர் இளைய தளபதி விஜய்யின் அறிவிப்பு வெளிவந்த சில நிமிஷங்களிலே பெற்று விடுகிறது.
            நம்முடைய கலைத்துறை மயக்கம் அப்படிப்பட்டது.
            நாடு வல்லரசாக இருப்பதை விட நல்லரசாக இருப்பது அவசியம் என்ற கருத்தானது அப்துல் கலாம் வல்லரசு குறித்த கனவு காணச் சொன்ன போதே, அதற்கு எதிர்க்கருத்தாகக் கூறப்பட்ட கருத்துதான். நடிகர் விஜய் சொல்லும் போது அது கூடுதல் அழுத்தம் கொள்கிறது.
            ரஜினி எனும் கலையுலக தாதா தனது அரசியல் பிரவேசம் குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பதால், விஜய் தனது அரசியல் பிரவேசத்தைத் தள்ளி வைப்பார் என்று கணிக்கப்பட்ட வேளையில் அவரது அரசியல் குறித்தக் கூற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
            எங்கள் நிறுவனத்தில் உடன் பணியாற்றும் நண்பர்கள், நண்பிகள் எல்லாம் விஜய்யின் இந்த அறிவிப்பைக் கேள்வி பட்ட உடனே, இனி விவசாயிகளின் பிரச்சனைகள் உறுதியாகத் தீர்ந்து விடும் (?!) நம்பிக்கையோடு பேசிக் கொண்டு இருக்கின்றனர்.
            நமக்கென்ன விவசாயிகளின் பிரச்சனைகள் எப்படியாவது தீர்ந்தால் சரிதான். அது கலைத்துறை மூலம் அரசியல்வாதியாக விரும்பும் விஜய் மூலம் தீர்ந்தால் என்ன? அரசியலிலே இருக்கும் அரசியல்வாதிகளால் தீர்ந்தால் என்ன?
*****

No comments:

Post a Comment

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...