15 Jun 2017

என் இனிய ப்ளாஸ்டிக் மனிதா!


என் இனிய ப்ளாஸ்டிக் மனிதா!
            ப்ளாஸ்டிக் அரிசி இங்கு இல்லை என்று சொல்லப்பட்டாலும், அது கிராமப் பகுதி வரை வந்து விட்டது.
            அசல் அரிசியை ப்ளாஸ்டிக் பையில் வாங்கி வந்தவர்கள், இப்போது ப்ளாஸ்டிக் அரிசியை ப்ளாஸ்டிக் பையில் வாங்கிச் செல்வது அவர்களுக்கேத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது நடந்து கொண்டிருக்கிறது.
            இப்படி ஓர் அரிசி இருப்பதால்தான் விவசாயிகள் போராட்டம் நடத்தினாலும், விவசாயமே நடைபெறா விட்டாலும் நிலைமையைச் சமாளித்து விடலாம் என்று நாம் நம்பும் தலைவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள் போலும்.
            ப்ளாஸ்டிக் குடத்தில் நீர் பிடித்து,
            ப்ளாஸ்டிக் குவளையில் நீர் பருகி,
            ப்ளாஸ்டிக் பாக்கெட், பாட்டில் மற்றும் கேன்களில் நீரை விலை கொடுத்து வாங்கி,
            ப்ளாஸ்டிக் பையிலும் கப்பிலும் தேநீர் குடித்து,
            ப்ளாஸ்டிக் பையில் பார்சல் கட்டிக் கொண்டு வந்து,
            ப்ளாஸ்டிக் கப்பில் இட்டிலி சுட்டுத் தின்று,
            ப்ளாஸ்டிக் உறையைப் போட்டு அதன் மேல் சூடான பதார்த்தங்களை வாங்கிச் சுவைத்து
            கடைசியில் ப்ளாஸ்டிக் அரிசியையே தின்னும் நிலைமைக்கு ஆளாகி விட்டோம்.
            ப்ளாஸ்டிக் அரிசியை நாமே நமது விழிப்புணர்வு மூலம்தான் தடுக்க வேண்டும் என்ற பொதுநல அறிவிப்புகளைப் பார்க்கும் போது, நெல் எந்த மரத்தில் காய்க்கும் என்று கேட்கும் நம் தலைமுறைக்கு எப்படி அந்த விழிப்புணர்வைக் கொடுப்பது என்பதுதான் யோசனையாக இருக்கிறது?
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...