மறுபடியும் ஆண்டவனுக்குச் சோதனை!
நான் அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும்
ஆண்டவன் கையில் இருக்கிறது என்று மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து இருக்கிறார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன
மாதிரி என்று சொன்ன ரஜினி அவர்களா மறுபடியும் நூறு தடவைக்கும் மேல் இதையே திருப்பிச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்?
இந்த நிலையில், ஏற்கனவே புரட்சிக் கலைஞர்
விஜயகாந்தை எதிர்த்து படாத பாடு பட்டு விட்டதால் "மறுபடியும் முதலிலேர்ந்தா?"
என்று கெளண்டர் கொடுக்க வைகைப்புயல் வடிவேலுவும் தயாராக இருக்க மாட்டார்.
இது எப்படி இருக்கு? என்று பஞ்ச் அடித்த
ரஜினிக்கு அவர் சொன்ன பதிலை வைத்துப் பார்க்கும் போது அது அப்படியேத்தான் இருக்கு
என்று பஞ்சர் ஆகி பதில் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.
ஆண்டவன் கையில் அரசியல் முடிவை விட்டு
விட்ட ரஜினிகாந்தை பெரியார் ஈ.வெ.ரா. இருந்திருந்தால் எப்படி விமர்சித்திருப்பார்?
"மகிழ்ச்சி! இதையெல்லாம் பார்க்க
வேண்டாம் என்றுதான் நான் முன்பே இறந்து விட்டேன்!" என்றிருப்பாரா?
*****
No comments:
Post a Comment