10 May 2017

அம்மா, அம்மி, ஆட்டுக்கல்


விருப்பங்கள்
அடிக்கடி விரும்பி
அணிவாள்
பூப்போட்ட புடவையை
விதவை அக்கா.
*****

அம்மா, அம்மி, ஆட்டுக்கல்
அம்மா அம்மியில் துவையல்
அரைத்து கஞ்சிச் சோறு பொங்கினால்
ஒரு படிச் சோறு தின்னலாம்.
ஆட்டுக்கல்லில் மாவரைத்து
இட்டிலி தோசை சுட்டால்
பத்து பனிரெண்டு சாப்பிடலாம்.
எல்லாம் பழங்கனவாகி
விதவிதமாய் வகைவகையாய்
வாயார வயிறார செய்து போட்ட அம்மா
வீட்டின் ஒதுக்குப்புறத்தில்
சீண்டுவார் இன்றி
மருமகள் எப்போதாவது போடும்
பருக்கைச் சோற்றுக்குக்
கையேந்தியபடி காலம் கழிக்க
மிக்சியும், கிரைண்டரும் வந்து விட்டப் பிறகு
அவள் அருகிலே அவளைப் போலவே
உபயோகமற்றுக் கிடக்கின்றன
அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும்.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...