ஒதுக்கல்
மீந்துப் போவது குறித்த
வேதனையோடும்
ஆசையோடு சமைத்ததை
ஒதுக்கி வைத்தது குறித்த
வருத்தத்தோடும்
வீணாகி விடாமல்
சாப்பிட்டுக் கொள்வாள்
அம்மா.
*****
வெற்றிகரமான இரண்டாவது...
ஒரு வியாபாரத்தை முடித்து
விட்ட தைரியத்தில்
"ஒரு கிலோ இருபது
ரூபா"
என்று கத்தத் தொடங்குகிறான்
எண்ணூற்று ஐம்பது கிராம்
கல்லை
வைத்துக் கொண்டு
ஒரு கிலோவாக எடை போட்டு
விற்பவன்.
*****
இவன் மனிதன் என்று...
தோளில் வந்தமர்ந்த பறவை
சட்டென்று பறந்து போனது
செல்பி எடுப்பதைப் புரிந்து
கொண்டு.
*****
No comments:
Post a Comment