பெருமிதம் கொள்வோமாக!
நமது மொழியைத் தின்றார்கள்
பண்பாட்டைக் கொஞ்சமாக
கொறித்துப் பார்த்தார்கள்
அவர்கள் மொழியைக் கற்கச்
செய்தார்கள்
அவர்களைப் போல நடக்கச்
செய்தார்கள்
நாமெல்லாம் பெருமை கொள்ள
எசமானனைப் போல வாழ்ந்த
நம்மையெல்லாம்
அவர்களிடம் கையேந்தி
வேலை பார்க்க வைத்தார்கள்
நமக்கு அதில் பெருமிதம்
உண்டு
விசுவாசமான வேலைக்காரர்கள்
நாமெல்லாம் என்று.
*****
உயிர் கொள்ளும் ஒன்று
பலூனாய் ஊதிய ஆணுறைக்குள்
துடித்துக் கொண்டு இருக்கிறது
ஓர் உயிர்.
காற்றில் பறக்கும் அவ்வுறை
ஓரிடத்தில் வெடித்து
விழுமிடத்தில்
இருக்கிறது
ஒரு குப்பைத் தொட்டி.
அதன் அருகே
அமைந்து இருக்கிறது
கருத்தரிப்பு சிகிச்சை
மைய
மருத்துவமனை ஒன்று.
*****
No comments:
Post a Comment