11 May 2017

பட்ஜெட் அழுக்கு


பட்ஜெட் அழுக்கு
ஓடும் இந்த நதியில்தான் குளித்தோம் என்பதை
நம்புவது கடினமாக இருக்கும்
குழாயில் குளிப்பவர்களுக்கு.
அருவியில் குளிப்பது அதிசயமாக இருக்கலாம்
ஷவர் பாத்தில் குளிப்பவர்களுக்கு.
கடலில் குளிப்பவர்களைப் பார்த்து
ஆச்சர்யமாக இருக்கலாம்
ஒரு வாளித் தண்ணீரில் குளிப்பவர்களுக்கு.
ஊர்க்குளத்தில் குளிப்பது என்பதை
கேள்விப்படாமலே போகலாம்
நீச்சல் குளத்தில் நீந்துபவர்கள்.
காலப்போக்கில் இப்போதெல்லாம் குளியல் என்பது
மாதம் இரண்டு சோப்பும்
முப்பது ஷாஷே சாம்பூமாக
பட்ஜெட் அழுக்கை நீக்க முடியாமல்
அவ்வபோது அடித்துக் கொண்ட
டியோடிரைன்டையும், பெர்ப்யூமையும்
கரைத்துக் கொண்டு
சாக்கடையாகக் கலக்கிறது
நம் வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில்.
*****

நிசம்
மெகா சைசில் வைத்திருந்த
கட் அவுட்டை அடித்து நொறுக்கினர்
மினி லாரியில் பதினைந்து பேர்களாக வந்தவர்கள்.
உள்ளே தியேட்டருக்குள்
திரைவெளியில்
வில்லனையும் சேர்த்து
அவனுடைய நூற்றுக்கணக்கான ஆட்களை
பந்தாடிக் கொண்டிருந்தார் ஹீரோ.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...