16 May 2017

விருந்தோம்பல்


விருந்தோம்பல்
மியூசிக் சிஸ்டம் அலறிக் கொண்டு இருக்கும் வீட்டில்
கண்களாலே முடிந்து விடும்
வரவேற்புகளும், விசாரிப்புகளும்.
"இதுக்காகவா ரயிலேறி
இவ்வளவு தூரம் வந்தோம்?" என்ற
சலிப்போடு மாமா போன் போட்டுச் சொல்லுவார்,
"ரயிலேறிட்டேன்! காலையில வந்துடுவேன்!"
என்ற அவரின் வேதனை புரியாமல்
"எங்கே அங்கேயே தங்கிடுவீங்களோன்னு
தவிச்சுகிட்டு இருந்தேன்!"
என்ற அத்தையின் பதிலில்
உற்சாகமாகி ரயிலை விட வேகமாக
ஊருக்கு விரைந்து கொண்டு இருக்கும் மாமாவின் மனசு.
*****

விசாரணை
தாத்தா இறந்த செய்தியை
பேஸ்புக்கில் இருக்கும்
நானூற்று சொச்சம் பேருக்கும் போட்டான்.
நேரில் வந்து துக்கம் விசாரித்தவர்கள்
பேஸ்புக்கில் இல்லாத நாற்பது பேர்கள்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...