15 May 2017

வாடகைக் காடு


கதை கேட்கும் மகள்
பேய்க்கதை கேட்டால் சிரிக்கிறாள்
பூதங்களின் கதை சொன்னால்
சுண்டு விரலால் பூதங்களைத்
தூக்கி எறிந்து விடுவேன் என்கிறாள்
ரெளடிகளின் கதை சொன்னால்
ஆ...ஊ... என்று சத்தமிட்டு
அடித்துக் காண்பிக்கிறாள்
முயல், யானை, நரிகளின் கதைகள்
சொல்லும் போது
"அய்யோ பாவம்!
அதுக எல்லாம் காடு இல்லாம
இப்போ எங்க இருக்கோன்னு?"
உச் கொட்டுகிறாள்.
*****

வாடகைக் காடு
தண்ணீர் பிடிப்பதன்
சிரமத்தைக் கருத்தில் கொண்டு
அடிக்கடி வீடு மாறுவதை
கவனித்துக் கொண்டிருக்கும் மகள்
ஒரு நாள் யானைகளைக் காட்டிய
தொலைக்காட்சி செய்தியின் ஊடே கேட்கிறாள்
"அந்த யானைகளுக்கு எல்லாம்
வேற நல்ல வாடகைக் காடு
கிடைக்கலியப்பா?"
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...