2 May 2017

பணம் 11ம் செய்யும்


அமுத விஷம்
            "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!" என்பதை ஒத்துக் கொண்டார் வேட்பாளர் அருமைநயாகம், ஓவர் பணப் பட்டுவாடாவால் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட அறிவிப்பைக் கேள்விபட்டதும்.
*****
பணம் 11ம் செய்யும்
            "பணம் பதினொன்னும் செய்யும்!" என்று தலையில் அடித்துக் கொண்ட இடைத்தேர்தல் வேட்பாளர் கண்ணுச்சாமியைப் புரியாமல் பார்த்தவர்களுக்காக புரியும் படி சொன்னார், "பதினொன்னா இடைத்தேர்தலை நிறுத்தும்!"
*****
ஏன் தள்ளுபடி?
            இடைத்தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளியானதும், "இனி பட்டுவாடா பண்ண பணத்தை எப்படி அறுவடை செய்யப் போறேனோ?" என்று கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்த வேட்பாளர் ஆறுமுகச்சாமி தொடர்ந்து சொன்னார், "விவசாயிகளுக்கு ஏன் கடன் தள்ளுபடி பண்ணணும்ங்றது இப்பதாம்பா புரியுது!"
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...