2 May 2017

கதை கதையாம்...


கதை கதையாம்...
கனவில் பெய்த மழை
நினைவில்
வறண்டு போன கதை
என்னிடம் ஒன்றும்
உன்னிடம் ஒன்றும்
இருக்கிறது தோழியே!
இரண்டும் ஒன்றுதான்
என்பது அறியாமல்
அது உன் கதை என்று நீயும்
இது என் கதை என்று நானும்
புலம்பிச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்
காது அறுந்த சமூகத்திடம்
கவிதை எனும் வடிவில்.
*****

6 லிருந்து 60 வரை
சிக்ஸ்பேக் வைத்து திரிந்தவனைப் பார்த்து
பெருமைப்படச் சொல்லிக் கொண்டான்
அறுபது வயதுக்காரன் ஒருவன்
"அவன் நம்ம சாதிக்காரன்!"
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...