2 May 2017

மட்டைப் பந்துக்குள் மற்றொரு விளையாட்டு


மட்டைப் பந்துக்குள் மற்றொரு விளையாட்டு
சூறாவளிப் போல் சுழன்று வந்த பந்தை
மட்டையால் அடித்து
ஆறு ஓட்டங்களைப் பெற்று
சிறுத்தை என சீறி வந்த பந்தை
நான்கு ஓட்டங்களுக்குத் துரத்தி அடித்து
சமிக்ஞை அறிந்து பந்தை பிடி கொடுத்தான்
மட்டைப் பந்துக்குள் மற்றொரு விளையாட்டு என
புக்கிங் விளையாடிக் கொண்டிருந்தவன்.
*****

தனியொருவன்
தனியொரு மனிதனுக்கு
உணர்வு இல்லையென்றால்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.
*****

கை விட்ட நாய்
கை விடப்பட்ட நாய்
இன்னொரு எசமானைத்
தேடிக் கொள்வதில்லை.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...