21 Apr 2017

உதவாமை


சிரிப்பு
நான்கைந்து நாட்கள்
கழித்து
ஒடித்தவனைப் பார்த்து
சிரிக்கிறது
உடைபட்ட இடத்தில்
துளிர் விட்ட தளிர்.
*****

வேண்டும்
மகன்தான்
வேண்டும் என்கிறார்கள்
பெற்றுக் கொடுக்கப்
பெண் வேண்டும்
என்பதை மறந்து.
*****

உதவாமை
சுரைக்காயைச் சொல்லிக்
குற்றமில்லை
கறிக்கு உதவுகிறது
அதைச் சொல்லிக் கொடுத்தவர்களைச்
சொல்ல வேண்டும்!
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...