காலத்தின் சிரிப்பு
சுண்டல் பொட்டலம் ஒன்று கேட்டதற்கு,
கூடுதலாக இன்னொரு சுண்டல் பொட்டலம் தந்த மூதாட்டி சட்டென அம்மாவை நினைவூட்டிச் சிரித்தார்.
*****
வீடு திரும்பல்
ஐந்து வருடங்களுக்கு முன் காணாமல் போன
தாத்தா, கை நிறைய பணத்துடன் வீடு திரும்பியதில் அனைவர்க்கும் அத்தனை மகிழ்ச்சி.
*****
அன்பின் இனிப்பு
திகட்டத்
திகட்ட இனிப்பு போட்டு தேநீர் அருந்தும் மாமாவுக்கு சுகர் இல்லாமல் இருப்பதற்கு திகட்டத்
திகட்டத் திகட்டாத அன்போடு இருக்கும் அத்தையும் காரணமாக இருக்கலாம்.
*****
No comments:
Post a Comment