விளம்பரங்கள்
வீடற்றவர்கள் கண்கள்
பார்ப்பதே இல்லை
ரியல் எஸ்டேட் விளம்பரங்களை
என்பதும்
நான்கு ப்ளாட்டுகள்
வாங்கி வைத்திருக்கும்
நண்பர்
தேடித் தேடி
பார்த்துக் கொண்டு இருக்கிறார்
ரியல் எஸ்டேட் விளம்பரங்களை
என்பதும்...
ம்...ம்...ம்!
*****
கெளரவம்
என்ன கெளரவமோ
தெரியவில்லை
கெளரவக் கொலை?!
*****
No comments:
Post a Comment