உலகுக்கு ஒரு செய்தி?!
தற்கொலை செய்து கொண்டவன் அனைவர்க்கும்
வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தான், "என் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல!"
*****
இது போதும்!
"அருவிக்கு வந்து குளிக்காமப் போனா
எப்படி?" என்று நண்பர் கேட்டதும், "இது போதும்!" என்று அருவி தெரியும்
படி ஒரு செல்பி எடுத்துக் கொண்டான் பண்டரிநாதன்.
*****
பீலிங்
தாத்தாவின் தகனத்திற்குப் பின் தாமதமாக
வந்த ஆனந்த் அழுது புலம்பினான், "கடைசியா ஒரு செல்பி கூட எடுக்க முடியாதபடி பண்ணிட்டீங்களேடா
பாவிகளா!"
*****
No comments:
Post a Comment