15 Apr 2017

உயிர் தரா உயர் படிப்புகள்


ஓலம்
            "மண்ணெணெய்யும் கொடுக்க மாட்டேங்றானுங்க! சிலிண்டரும் அனுப்ப மாடடேங்றானுங்க! இருக்குற சீமை கருவேலங்களையும் அழிக்கிறேன்னு விறகுக்கும் எதுவும் இல்லாம பண்ணப் போறானுங்களா?" ஓலமிட்டு அழுதாள் தாயம்மா.
*****
உயிர் தரா உயர் படிப்புகள்
            பெரிய படிப்பு படிக்கப் போறேன்னு கிளம்பிய மகனை, எந்தப் படிப்பும் படிக்காத அப்பா கேட்டார், "உசுருக்குச் சேதாரம் இல்லாம படிச்சிட்டுத் திரும்பி வந்துடுவியா?"
*****
அது மட்டும்!
            அந்தக் காகிகதத்தில் அது மட்டுமே எழுதப்பட்டு இருந்தது, "படித்தவுடன் கிழித்து விடவும்!"
*****

No comments:

Post a Comment