சொல்வதும், சொன்னதும்
சொல்வதெல்லாம் உண்மை
என்று சொன்னவன்
சொன்னதெல்லாம் பொய்.
*****
வேலை
பொண்ணு கட்ட
வேலையில்
இருக்க வேண்டும் என்பார்கள்
எந்த வேலையும் இல்லாமல்
ஊரில்
இரண்டு மூன்று தொடுப்புகளை
வைத்திருப்பவர்கள்.
*****
செயின்
கஷ்டப்பட்டு சேர்த்த
பணத்தில் வாங்கிய
அரை பவுன் செயின் அன்றோ
அடிக்கடி உதவுகிறது
அடகு வைக்க.
*****
No comments:
Post a Comment