இடம்
டவுன்ல எல்லாம் இருக்கு
என்கிறார்கள்
மக்கா!
சிறுநீர் கழிக்க
இடம்
இருக்கா?
*****
தவிர...
இந்தக் கனத்தில்
எதுவும் இல்லை
இந்தக் கனம் தவிர...
*****
வெட்டு மரங்கள்
மதுக்கடை வாசலில் நிற்கும்
அவர்கள்
கள் மரங்களென
தென்னை மரங்களை வெட்டிய
பெரியார் மேல் ஏக பிரியம்
கொண்ட
கட்சியின் கட்சிக்காரர்கள்.
பெரியார் இன்றிருந்தால்...
பாவம்
தென்னை மரங்களையா
கொடி மரங்களையா
எதை வெட்டுவார்?
*****
No comments:
Post a Comment