முதன் முதலில்
ஓடிப் போய் கல்யாணம்
செய்து கொண்டதற்காய்
முதலில் தலை முழுகிய
அப்பாதான்
முதலில் வந்துப் பார்த்தார்
பேரன் பிறந்ததும்.
*****
வழுக்குப் பாதை
பதினான்கு வருசங்களுக்கு
முன்
சுடுகாட்டுக்குப் போக
சரியான வழியில்லாத
வழுக்கு களிமண் அப்பும்
நெடுந்தோப்பு வழியே
வழுவழு தார்சாலை
வழுக்கிக் கொண்டு செல்கிறது
சுடுகாட்டைச் சுற்றி
வளர்ந்த
குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல் நகர் முதல்
பாலை நகர் வரை.
*****
No comments:
Post a Comment