11 Apr 2017

நீர் பாய்ச்சல்


நீர் பாய்ச்சல்
பக்கத்து வயல்காரனின்
மடையடைத்து
தன் வயல் நிரப்பி
மடையடைத்துப் போனவனின்
வயல் நீர்
நண்டு வளை வழியாக
பாய்ந்து கொண்டிருக்கும்
பக்கத்து வயல்காரனின்
வயலுக்குள்.
*****

விலை
"விசுவாசத்தின் விலை
ரெண்டு ரூபாய்!"
என்றான்
இரண்டு ரூபாய்க்கு
நாய்க்க வறுக்கியை வாங்கிப் போட்டவன்.
*****

No comments:

Post a Comment