நன்றி
தண்ணீரை இறைத்துக் கொண்டு சென்ற குடிநீர்
லாரிக்கு மனதார நன்றி சொன்னாள் வாசல் தெளிக்க வந்த சகுந்தலா.
*****
ரெஸ்பான்ஸ்
"அட்டென்சன் ப்ளீஸ்!" என்று
மேனேஜர் கத்தியதும் அவரவர்களும் வெளியே வந்தனர் வாட் அப்பிலிருந்து.
*****
படிச்சா வேலை!
"படிச்சதான்டா வேலை கிடைக்கும்!"
என்று ஆசிரியர் சொன்னதை மருட்சியோடு பார்த்தான் விடுமுறை நாட்கள் வந்தால் சித்தாள்
வேலைக்குச் செல்லும் அரவிந்த்.
*****
No comments:
Post a Comment