இடம், பொருள், ஏவல்
மூக்கடைத்துக் கொண்டு
பொதுக் கழிப்பிடத்தைத்
தாண்டி
சற்றே கடந்தால்
ஆபத்பாந்தவனாய் வந்து
விடும்
சிறுநீரைப் பீய்ச்சியடிக்க
மறைவான ஒரு சுவர்.
*****
சுதந்திரம்
ஆனா... என்று
அறுபது தலைப்புகள் கொடுத்து
இது தவிர்த்து
சுதந்திரமா எழுதுங்க
என்கிறார்கள்
சுதந்திர தேசத்தின்
ரசிகர்கள்.
*****
No comments:
Post a Comment