10 Apr 2017

தூக்க வலை


குறுஞ்செய்தி
ஆசை ஆசையாக
கேட்டு வாங்கிய எண்ணுக்கு
ஒருநாள்
குறுஞ்செய்தி வந்தது
"இனிமேல் கால் பண்ணாதே!"
*****


தூக்க வலை
வலை தூக்கி
வரும் போது
கொசுவை
உள்ளே அழைத்து வந்து விடுவான்
அடிக்கடி
மாறி மாறி சென்று வரும்
சின்ன பையன்.
கொசுவலைக்குள் கொசு அடிப்பதற்குள்
அல்லோகலப்பட்டு விடும்
பொழுதுகளில்
சாமர்த்தியமாக
எல்லாவற்றையும்
அடித்து விடுவான்
பெரிய பையன்.
நடுச்சாமம் கடந்து பார்க்கையில்
உருண்டு போய்
கொசுவலைக்கு
வெளியே கிடப்பான்
நடு பையன்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...