13 Apr 2017

குளிர்


குளிர்
ஷொட்டர் என்கிறார்கள்
மப்ளர் என்கிறார்கள்
சால்வை என்கிறார்கள்
சுருட்டிக் கொண்டு
சுருண்டு படுத்துக் கொள்ளும்
கைலிக்குள்
முடிந்து போகிறது குளிர்காலம்.
*****

இருப்பு
எங்க வீட்டுல பாட்டி இருக்காங்களே
என்று குஷியோடு  சொன்ன
பக்கத்து வீட்டு ஆதிக்கோடு
சண்டை போட்டான்,
இடது வீட்டின் சந்தீப்,
"பாட்டின்னா முதியோர் இல்லத்துலதான்
இருப்பாங்க!"
என்று.
*****

No comments:

Post a Comment