18 Apr 2017

வைத்திருப்பு


வைத்திருப்பு
பிஸ்கெட் வாங்கி வைத்திருக்கிறார்
போஷாக்கான உணவு என்று
டப்பாக்களில்
எதையெதையோ வாங்கி வைத்திருக்கிறார்
புசுபுசு முடிக்காக
பாட்டில் திரவியங்கள் வாங்கி வைத்திருக்கிறார்
மருந்து வாங்கி வைத்திருக்கிறார்
பிச்சைக்காரனை கண்ட மட்டும்
ஓட ஓட விரட்டுகிறார்
நாய்க்காக இவ்வளவையும்
வாங்கி வைத்திருக்கும்
மாடி வீட்டுக்காரர்.
*****

மறைப்பு
சுவருக்கு
இந்தப் பக்கம்
வந்தால்
எதுவும் மறைப்பதில்லை.
*****

No comments:

Post a Comment