நடுத்தர வாழ்வு
வானத்தை அளக்கும்
பறவை
இரைக்காக
தரையில் திரியும்.
*****
கரைப்பு
கண்டிப்பு அப்பாக்களின்
தோரணையைக் கரைத்து விடும்,
"அப்பா! ப்ளீஸ்ப்பா!"
என்ற செல்ல மகள்களின்
கெஞ்சல்கள்
என்று தெரிந்தும்
கண்டிப்புடன் இருப்பது
அப்பாக்களின் வேலையும்
கடமையும்
அதைக் கரைத்து விடுவது
மகள்களின் வேலையும் உரிமையும்.
*****
No comments:
Post a Comment