24 Apr 2017

கொடி வணக்கம்


கொடி வணக்கம்
இந்த இரவில்
சமாதானக் கொடி பறக்கும்
கோபச் சூரியன் அஸ்தமிக்கும் போது.
காதல் வெறி கொள்ளும்
ஊடலில் கிழியும் போது
சமாதானக் கொடியை
"சாரிடா செல்லம்!"
என்ற வார்த்தை ஊசி தைத்து
பறக்க விடும்
வெற்றிக் கொடியாய்.
*****

சபிப்பு
ஒரு சிறுமழைக்குத் தாங்காத
பெருநகரத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
சாதாரணமாகப் பெய்யும்
மழையைச்
சபித்தபடி.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...