16 Apr 2017

உறிஞ்சல்


மாற்றம்
வாக்குச்சீட்டு
ஓட்டிங் மிஷின் ஆகியும்
பழைமை மாறாத முறைகள் மட்டும்
அப்படியே
கள்ள ஓட்டு
கள்ளத் தனம்
லஞ்ச லாவண்யங்களோடு.
*****

உறிஞ்சல்
கொடுக்கக் கொடுக்க
வேர்கள்
உறிஞ்சிக் கொள்ளும்
பன்மடங்காக
என்பது
கைநீட்டி
ஓட்டுக்கு நோட்டை
வாங்குபவர்களுக்கு
யாருக்குத்தான் தெரியாது.
*****

பரவல்
பலர் கால் குத்திக் குத்தியே
பல இடம் பரவும்
நெருஞ்சில்
குடி கெடுக்கும்
குடியைப் போல!
*****

No comments:

Post a Comment