18 Apr 2017

வீடாய் வளர்ந்து


வீடாய் வளர்ந்து
வீடென்ற ஒன்று
வாய்த்து விட்டால்
நடுரோட்டில் செல்பவனை
நன்றாக வையலாம்.
மாளிகை ஒன்றை
கட்டி விட்டால்
அநியாயங்கள் செய்து
நியாயமாக்கலாம்.
அடுத்து அதை
அரண்மனையாக்கி விட்டால்
போதும்
இருப்பவனையெல்லாம்
அடிமையாக்கி
ஆட்சி செய்யலாம்.
*****

பிடித்தம்
வேட்டையாடுவது பிடிக்காது
மான்கறி மட்டும்
பிடிக்கும்.
*****

No comments:

Post a Comment