17 Apr 2017

கவலைகள் பல விதம்


எதற்காக...?!
எதற்காக
நம்மிடம் வந்து
நம்மிடம் வளர்ந்து
கசாப்புக் கடைக்குச் செல்கிறது
கருப்பு ஆட்டுக்குட்டி?!
*****

ஒரு கிராமம்
உலகம் ஒரே
கிராமம் ஆகி விட்டது
என்கிறார்கள்.
கங்கைதான்
பக்கத்தில் வர மாட்டேன்கிறது,
காவிரித் தண்ணீரும்
தாகத்திற்கு
கிடைக்க மாட்டேன்கிறது.
*****

கவலைகள் பல விதம்
நூற்றுக்கு
99 வாங்கியும்
ஒரு மதிப்பெண் போன கவலை
ஒட்டு மொத்த குடும்பத்திற்கும்.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...