18 Apr 2017

வெளிச்சம்


முடியாது
நெடிதுயர்ந்த மரம்
மழைத்துளியிடம்
மட்டும்
பீற்றிக் கொள்ள முடியாது.
*****

வெளிச்சம்
கண்ணில் படுபவர்களுக்கு எல்லாம்
அணைக்க மறந்த
தெருவிளக்குகள்
பகல் வந்ததைச் சொல்கின்றன.
*****

நன்றி
காதலித்ததற்காக
நன்றி
அன்றி,
வேறென்னச் சொல்ல
திருமணப் பத்திரிகையை
நீட்டுபவரிடம்.
*****

No comments:

Post a Comment