வழக்கு
உறங்கத் தோதிருப்பதில்லை
என்று
சென்று வரும் பேருந்தில்
உறங்கிக் கொண்டு
வழக்கிற்காக
அலைந்து திரிபவன்
சிரித்துக் கொண்டே சொல்கிறான்
"ஊரில் உள்ள நிலத்துக்கு
சென்னையில
வழக்கு!"
*****
தேர்தல்
பொம்மைகளே
பொம்மைகளோ
தேர்ந்தெடுங்கள்
பொம்மலாட்டக்காரனை.
*****
No comments:
Post a Comment