17 Mar 2017

குட் பாய் மாடுகளா!


ஆறுதல்
            திருடு போன நகை, பணத்துக்கு ஆளாளுக்கு ஆறுதல் சொன்னார்கள், திருடிய எதிர் வீட்டு சந்துரு உட்பட.
*****
குட் பாய் மாடுகளா!
            இரசாயன உரம் வந்த பிறகு சாணி போடும் மாடுகளைக் குறைத்துக் கொண்டார் வீரகேள விவசாயி மம்புட்டி மாறன்.
*****
20 க்கு 3
            இருபது நாட்டு மாடுகள் வைத்துக் கொண்டு ஊருக்கு முப்பது லிட்டர் பாலூற்றிய பால்க்காரி பாலம்மா, பத்து லிட்டர் கறக்கும் சீமை மாடு வந்ததும் இருபதை மூன்றாக்கிக் கொண்டாள்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...