18 Mar 2017

முதலிலிருந்து


முதலிலிருந்து
எத்தனை முறை
எடுத்துச் சொன்னாலும்
கற்றுக் கொள்பவன் இல்லை
மனிதன்!
அதனால்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு விசயமும்
முதலிலிருந்து
கற்றுக் கொடுக்கப்படுகிறது
முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்
அவனுக்கு.
கற்றுக் கொடுக்கும் வரை
அனுபவங்கள் ஓய்வதில்லை.
கற்றுக் கொள்வதற்கு முன்
வாழ்க்கையும் முடிவதில்லை.
ஆக, ஒவ்வொரு நாளும்
துவங்குகிறது
ஆரம்பத்தின் முதல் புள்ளியோடு
இப்புவியில் சிருஷ்டி கொண்ட மனிதனுக்கு!
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...