8 Mar 2017

முடியாத புன்னகை


முடியாத புன்னகை
அண்ணன் வாங்கி வைத்த
ஹெல்மெட்டைப் பார்க்கும் போதெல்லாம்
போட்டோவில் சிரிக்கும் அண்ணனே
சொல்வதைப் போல இருக்கிறது,
"அணியப்படாத ஹெல்மெட்டுகள்
சில நேரங்களில்
அணியப்பட வாய்ப்பில்லாமலே
போய் விடலாம்!"
*****

வாசம்
அத்தைக்கு ஏன்
எப்போதும் மாமா
மரிக்கொழுந்து வாங்கி வருகிறார்
என்ற புரியாத புதிர்
மாமா செத்த
நாற்பது வருடங்களுக்குப் பின் புரிபட்டது,
அத்தைக்கு மரிக்கொழுந்து
வாசம் பிடிக்காது.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...